நாளைய தினம் அறிவிக்கவுள்ள உத்தியோகபூர்வு முடிவு என்ன?.. எதிர்பார்ப்புக்களுடன் மக்கள்!..

0
74

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் தனது பதவி விலகல் தொடர்பில்  உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

நாளை பிரதமர் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

இதன்போது பிரதமர் பதவியிலிருந்து தான்   விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 இதேவேளை விசேட அமைச்சரவை கூட்டத்தில் தனது பதவிவிலகலின் பின்னர் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான உரிய திட்டம் காணப்பட்டால் தான் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.