அமீரகத்தில் செவிலியருக்கு நேர்ந்த சோகம்!

0
682

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ்-அல்-கைமாவில் ஈத் விடுமுறையின் போது நடந்த பயங்கர கார் விபத்தில், இந்திய செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராஸ்-அல்-கைமாவில் உள்ள அல் ஹம்ரா கிளினிக்கில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்தார்.

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 36 வயதான டின்டு பால் என்ற செவிலியர் தனது கணவர் கிருபா சங்கர், மற்றும் குழந்தைகள் – கிருதின்(10), ஒன்றரை வயது ஆதின் சங்கர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் மே 3ம் தேதியன்று காரில், ஜெபல் ஜெய்ஸ் மலைக்குச் சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்பத்தினரை பொலிஸார் ரசல் கைமாவில் வைத்தியசாலையில் சேர்த்தனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும், மறுநாள் செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் மற்றும் மகன் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

அவருடைய குடும்பத்தினர் இந்த சோக செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் உள்ளனர். டின்டு பாலின் சகோதரர் அவருடைய இறுதிச்சடங்கிற்காக அங்கு சென்றுள்ளார்.  

கடந்த ஒரே வாரத்தில் நடந்துள்ள இந்திய செவிலியரின் இரண்டாவது மரணம் இதுவாகும்.