ஐபிஎல்லில் நட்சத்திரமாக ஜொலிக்கும் இலங்கை வீரர்!

0
205

ஐபிஎல்லில் 54 – வது போட்டி இன்றைய தினம் வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

மேலும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பாட முடிவு செய்தது, இந்த நிலையில் துடுப்பெடுத்து ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 192 ஓட்டங்களை எடுத்தது.

193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.

மேலும் இந்த போட்டியில் இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் 5 விக்கெட்களை எடுத்து மிரட்டினார்.