பிரதமரை சந்திக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

0
237

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) இன்றைய தினம் (08-05-2022) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் (Gotabaya Rajapaksa) இடையில் இன்று (08-05-2022) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.