பொலிஸாரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி நபரொருவர் சுட்டுக்கொலை!

0
76

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் நபரொருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (07-05-2022) மாலை தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் நடந்துள்ளது. 

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

பொலிஸார் விசாரணையில் இருக்கும் ஒரு நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், அந்த சந்தேக நபரை பொலிஸார் கேப் டவுனில் உள்ள சோமர்செட் வைத்தியசாலைக்கு நேற்று அழைத்துச் சென்றனர். 

அங்கு சென்றதும், அந்த 40 வயதுடைய நபர் கண்ணிமைக்கும் நேரத்தில், ஒரு பொலிஸாரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி, வெறித்தனமாக பல தடவை சுட்டுள்ளார். 

குறித்த நபர் பொலிஸாரின் துப்பாக்கியை எடுத்து, அவரது தலையில் சுட்டதில், பொலிஸ் அதிகாரி பலத்த காயமடைந்தார். மேலும், அவரால் 2 நோயாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

உடனே மற்ற பொலிஸார் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவரை வெளியே அழைத்து சென்றனர். இதனால் வைத்தியசாலை வளாகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. 

இதேவேளை, உலகில் மிக அதிகமாக கொலை சம்பவங்கள் நடைபெறும் நாடாக தென் ஆப்பிரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.