அணு ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தோம்; ரஷ்யா

0
581

உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் திகதி போர் தொடங்கியது.

தற்போது 72வது நாளாக நீடித்து வரும் இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிபலனளிக்கவில்லை.

    உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில்,உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், அதற்கான பயிற்சியில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜைட்சேவ் தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்யா உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைக்கு இது பொருந்தாத ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.