கனடாவில் பியானோ ஆசிரியரின் மோசமான செயல்!

0
255

கனடாவில் பியானோ இசை கற்றுதரும் ஆசிரியர் ஒருவர் கைதான நிலையில் அவர் மீது முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Okanagan-ஐ சேர்ந்தவர் நீல் நீன். இவர் பியானோ ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் தன்னிடம் பியானோ இசைக்கருவியை இசைக்க கற்று கொள்ள வந்த மாணவியிடம் நீல் அத்துமீறியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அவரை கடந்தாண்டு கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் நீல் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 22ஆம் திகதி வரை அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதியப்படாத நிலையில் தற்போது தன்னிடம் பயிலும் மாணவ, மாணவியிடம் தகாத முறையில்  தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் நீல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் . அதேவேளை அவரால் மேலும் சில மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.