கோட்டாபயவிற்கு அதிர்ச்சிக்கு மேல் தொடரும் அதிர்ச்சி

0
489

நேற்றைய தினம்  பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். 

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்திருந்தார்.

பின்னர், நேற்றைய தினம்  புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ராஜபக்ச தரப்பினரை மட்டுமல்ல விசேடமாக கோட்டாபய ராஜபக்சவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Gallery