பத்தரமுல்லையில் பதற்றம்! பொலிசாரின் தாக்குதல் தீவிரம்

0
90

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியை அண்மித்த நாடாளுமன்ற நுழைவு வீதியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற நுழைவுப் பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வீதித்தடைகள் மாணவர்களால் அகற்றப்பட்டதை தொடர்ந்தே போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.