ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழன்!

0
235

வெளிநாட்டில் வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டிழுப்பில் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அபுதாபியில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பலருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. பிக் டிக்கெட்டில் லொட்டரியில் (அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில்) இரண்டாவது பரிசான Dh1 மில்லியனை தமிழர் ஒருவர் தட்டி சென்றுள்ளார்.

துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவருக்கே இந்த பரிசு கிடைத்துள்ளது. 072051 என்ற வெற்றிக்கான லொட்டரி பரிசு சீட்டை ஏப்ரல் 26ஆம் திகதி அவர் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியை தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் Dh12 மில்லியன் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது.

இந்த பரிசுதொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளனர். அதன்படி ஒருவருக்கு Dh1.2 மில்லியன் அளவுக்கு பணம் கிடைக்கும். முஜீப் கூறுகையில், இது எதிர்பாராதது. நான் என் வாழ்நாளில் கோடீஸ்வரன் ஆவேன் என்று நினைத்ததேயில்லை. எனக்கு கடன்கள் அதிகமாக உள்ளது, வெளிநாட்டில் பணிபுரிந்த பிறகு கேரளாவில் சொந்த வீடு கட்ட முடிந்தது. நான் வீட்டுக் கடன்களையும் இப்போது அடைத்துவிடுவேன்.