பிரதம விருந்தினராக ஷிரந்தி ராஜபக்க்ஷ; எழுந்த சர்ச்சை!

0
379

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளதாக நிலையில் அது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த வைபவத்தை பெண் வழங்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில்,பெண்கள் பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த வைபவத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியும் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வைபவத்துக்கு ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டமைக்கு, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்களை கௌரவிக்க ஷிரந்தி ராஜபக்சவை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா? பெண் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மக்கள் போராட்டத்திற்கு இவ்வளவு தொனியில் காது கேளாதவர்களா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.