ஹர்த்தாலில் பங்கேற்கும் அரச ஊழியர்களுக்கு சம்பள வெட்டு!

0
488

அரசாங்கத்திற்கு எதிராக இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் ஹர்த்தாலில் பங்கேற்கும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் வெட்டப்படும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களின் இந்த சம்பளக் குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ கடித படிவ மாதிரியை பயன்படுத்தி போலியான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என்பதுடன், ஜனாதிபதி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என, இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போலித் தகவல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.