பதவி விலகுவது தொடர்பில் மஹிந்த வெளிட்ட அறிவிப்பு

0
78

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவையை அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

ஆனால் பிரதமரின் பதவி விலகல் பிரச்சினைக்கு தீர்வாகாது என்ற அமைச்சர்களின் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

“எதிர்ப்புகளுக்கு பயந்து பதவி விலகல் அர்த்தமற்றது” என்ற பிரதமரின் அறிக்கையை ஏற்காத ஜனாதிபதி, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீண்ட விவாதத்தின் பின்னர் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகுவது என்றும் அதன் பின்னர் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை புதிய அமைச்சரவையை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.