“மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்” ஆரம்பமாகிறது ஹர்த்தால்!

0
528

மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிப்போம் – மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.

இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு, 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

டீசல் இன்மையின் காரணமாக இன்று மாத்திரமின்றி எதிர்வரும் சில தினங்களுக்கும் தம்மால் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.