ஆயுதங்களை உக்ரைனுக்கு அதிகமாக வழங்கும் ஜெர்மனி!

0
181

ஏற்கனவே அறிவித்தபடி 5 ஹோவிற்சர் பீரங்கிகளை தவிர மேலதிகமாக இரண்டு ஹோவிற்சர்களையும் சேர்த்து 7 ஹோவிற்சர்களை ஜெர்மனி, உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லம்பிரிச்ட் (Christine Lambrech) இன்று தெரிவித்தார்.

இந்த ஹோவிற்சர் பீரங்கிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சி வருகிறன வாரம் ஆரம்பிக்கும் என்று ஸ்லோவாக் நகரான சிலியாகில் நெதர்லாந்தின் பாதுக்காப்பு அமைச்சரை சந்திக்கவுள்ள நிலையில்  இதை தெரிவித்தார்.

அதேவேளை இதற்கு முன்னர் ஜெர்மனி உக்ரைனுக்கு சரிவர எந்த கனரக ஆயுதங்களையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.