நேற்றைய நாடாளுமன்றம் குறித்து விளக்கம் அளித்த தயாசிறி

0
97

நாடாளுமன்ற அமர்வு நேற்று (05-05-2022) காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

குறித்த அமர்வின் போது, பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கருத்து தெரிவிக்கையில்,

சுயாதீன அமைச்சர்கள் அனைவரும் கலந்துரையாடி, ரஞ்சித் சியம்பலாபிடியவை வேட்பாளராக நியமிக்க கூறினோம். அதன் அடிப்படையில் சமகி ஜன பல வேகய கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், சமகி ஜன பல வேகய கட்சியினர் அவர்களிடையே கலந்துரையாடி கொண்டனர்.

அதன்பின்னர் சில அமைச்சர்கள் கூறினார்கள் ரஞ்சித் சியம்பலாபிடியவின் பெயரை அகற்றி வேறு ஒருவரின் பெயரை முன்வையுங்கள் என்று.

அந் நேரத்தில் எங்களுக்கு மீண்டும் தலைவர்களிடம் கூறி தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது, ஏனென்றால் நாடாளுமன்றம் ஆரம்பமாகியது.

இதேவேளை, அரச கட்சியினர் எழும்பி எங்களுடைய கட்சியில் இருந்து யாரும் வேட்பாளர் இல்லை. எனவே ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கு நாங்கள் ஆதரவை வழங்குகின்றோம் என்றனர் என தெரிவித்தார்.