உக்ரைனுக்கு மீண்டும் திரும்பும் கனேடிய தூதர்

0
424

போலந்திலிருந்து உக்ரைனுக்கு மீண்டும் திரும்பும் கனேடிய தூதர்.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் தலைநகர் Kyiv உட்பட, பல நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

Kyiv நகரில் தான் பல நாடுகளின் தூதரங்கள் அமைந்துள்ளன. ஆகவே, தாக்குதலைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் தூதரகங்களின் பணியை போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தவண்ணம் தொடரும் வகையில், தங்கள் தூதர்களை Kyivஇலிருந்து வெளியேற்றின.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத்தொடர்ந்து, கனடாவும் தனது தூதரை போலந்திலிருந்து தற்காலிகமாக பணியாற்றக் கோரியிருந்தது.

தற்போது ரஷ்யா உக்ரைனின் கிழக்குப் பகுதி மீது கவனம் செலுத்தி அங்கு தாக்குதல்கள் நடத்தி வருவதைத் தொடர்ந்து Kyivஇலிருந்து வெளியேறிய மற்ற நாடுகளின் தூதர்கள் தற்போது மீண்டும் Kyivக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் 71ஆவது நாளாகத் தொடரும் நிலையில், கனேடிய தூதரும் தற்போது போலந்திலிருந்து மீண்டும் Kyivக்குத் திரும்ப இருக்கிறார்.

இந்த தகவலை வெளியிட்ட கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Melanie Joly, நமது நோக்கம் மீண்டும் நமது தூதரகப் பணிகளை உக்ரைனிலிருந்து தொடர்வதாகும் என்று கூறியுள்ளார்.