கப்புட்டு காக் என வாகனத்தில் கோர்ன் அடிப்பவர்களுக்கான எச்சரிக்கை

0
1051

பிரபலமாகியுள்ள கப்புட்டு காக் காக் காக் பசில் பசில் என்ற தாளத்தில் எழுப்பும் ஒலியினால் வாகனங்கள் தீப்பிடித்து எரிய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயந்திர பொறியியலாளர் முர்த்தி தேவசுரேந்திர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நீண்ட நேரம் வாகனங்களின் ஒலியை இவ்வாறு எழுப்பும் போது இந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒலி கருவியின் மின் கம்பிகள் ஊடாக அதிகமாக மின்னோட்டம் பாய்வதால், வாகனம் தீப்பிடிக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக சில நொடிகள் பயன்படுத்தும் வகையிலேயே வாகனங்களுக்கான ஒலிக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அதனை நீண்டநேரம் ஒலிக்க செய்வதன் காரணமாக அதிகளவான மின்னோட்டம் மின் கம்பிகள் ஊடாக பயணித்து தீப்பற்றக் கூடும் எனவும் முர்த்தி தேவசுரேந்திர கூறியுள்ளார்.

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இந்த கப்புட்டு காக்கா காக்கா பசில் பசில் என்ற கோஷத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.