நாடாளுமன்ற வீதியூடான போக்குவரத்துக்கு தடை!

0
232

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இன்றும், நாளையும் நாடாளுமன்ற வீதிகள் தடைப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை அண்மித்த தியத்தஉயன, பொல்துவ சந்தியில் இருந்து ஜெயந்திபுர சந்தி வரையான வீதியும், ஜெயந்திபுர சந்தியில் இருந்து கியங்ஹென் வரையான வீதியும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் போது அவ்வபோது முன்னெடுக்கப்படும் மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமனற் ஊழியர்கள் பயணிப்பதற்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் இதனால் நாடாளுமனற் நடவடிக்கைகளை தடையின்றி தொடரமுடியாத நிலை ஏற்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.