டீசலை பெற்று கொள்வதில் சற்று தாமதம் ஏற்படலாம்!

0
246

டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெட்ரோல் விநியோகம் மூன்று நாட்களுக்குள் சீராகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கடந்த இரு தினங்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது.