நாடாளுமன்றில் 148 பேரின் உண்மை முகம் அம்பலமானது

0
256

நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் உறுப்பினர் இராசாணிக்கம் சாணக்கியன், 148 பேர் ராஜபக்க்ஷர்கள் பக்கமே உள்ளதாகவும் கூறினார்.

அதோடு சுயாதீனமாக செயற்படுகிறோம் என கூறிக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவு ஊடாக நாடாளுமன்றில் இடம்பெறும் அரசியல் நாடகம் வெளிப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிடியவுக்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியபோதும், அவர் எதிர்க்கட்சியிலேயே உள்ளார் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.