நாளை முழுவதுமாக முடங்கவுள்ள இலங்கை

0
312

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்தள்ளது.

நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், போக்குவரத்து, வங்கி மற்றும் இலங்கை தபால் சேவை ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கை குடிவரவு குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கம், கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் வர்த்தக ரீதியாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் CIP களின் சேவைகள் இடைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே உணவக உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக் கொடி ஏற்றி, விடுதிகளின் முன்புறம் கவனத்தை ஈர்க்குமாறு ஊழியர்களை தொழிற்சங்கத் தலைவர் அசேல சம்பத் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஹர்த்தாலுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்த தடைக்கு ஆதரவாக இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ்களை இயக்குவதில் இருந்து விலகிக்கொள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், ரயில் இயக்கப்பணியாளர்கள் , ரயில் நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டு பணியாளர்கள், நிலைய அதிபர்கள், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.