நிதிப் பற்றக்குறை காரணமாக பொரளை பொது மயான பணிகள் ஸ்தம்பிதம்!

0
577

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றக்குறை காரணமாக பொரளை பொது மயானத்தின் சுடுகாட்டில் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைக்கு சுடுகாடு இயங்கத் தேவையான எரிவாயு கிடைக்காததே காரணம் என குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொழும்பு மாநகர சபை எரிவாயு வழங்குனருக்கு சுமார் 5 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்திற்கான எரிவாயு வாங்குவதற்கு நிதி இல்லை,” என்று அந்த அதிகாரி கூறினார்.

“சில நாட்களுக்கு தகனம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விநியோகஸ்தரிடம் தேவையான அளவு எரிவாயு உள்ளது, ஆனால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தகனம் செய்ய எரிவாயு இல்லை,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் ருவன் விஜேமுனியை தொடர்பு கொண்டபோது, பணம் செலுத்துவதில் தாமதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.