மஹிந்த ராஜபக்ஷவை போன்று சடலமாக காட்சியளித்த போராட்டக்காரர்கள்!

0
271

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு தழுவிய ரீதியில் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டங்களை மக்கள்  முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) போன்று உடையணிந்து, சிவப்பு நிற சால்வையுடன் சடலமாக காட்சியளித்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது மலர்வளையம் வைத்து அந்த நபருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஆர்ப்பாட்டத்திற்காக அலரி மாளிகைக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.