ரஷ்ய – உக்ரைன் போரால் லாபம் கண்ட இந்தியா!

0
96

உலக கோதுமை விலை இந்திய விநியோகஸ்தர்களுக்கு தற்போது இலாபமீட்டும் ஒன்றாக மாறியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து இந்திய பயிர்ச்செய்கையாளர்களின் பயிர்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு இது அரச தானிய பெறுகை நிறுவனத்திற்கு இருந்த அழுத்தத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இந்நிதியாண்டில் நாட்டின் மொத்த கோதுமை ஏற்றுமதி இதுவரை 6.6 மில்லியன் தொன்களை எட்டியுள்ளன. உலகின் ஏனைய கோதுமை உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும் போது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதேவேளை உலகிற்கான கோதுமை விநியோகத்தில் கால் பங்கை ரஷ்யாவும் உக்ரைனும் இணைந்து பிரதிநிதித்துவம் செய்துள்ளன.

அவர்களது கோதுமை அறுவடை இவ்வருடம் ஒகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் கிடைக்கப்பெறும். அதனால் உலகளாவிய கோதுமை விலை தற்போது அதிகரித்து, ஒரு தொன்னுக்கு ரூ.24,000 – ரூ 25,000 என்றபடி காணப்படுகின்றது.

அதேசமயம் இந்திய கோதுமை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி இறுதியாகும் போது 6.6 மில்லியன் தொன்கள் வரை அதிகரித்து காணப்பட்டது. 2012-13 நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 6.5 மில்லியன் தொன்களை எட்டியது. அதன் பின்னர் இம்முறை 6.6 மில்லியன் தொன்களை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.