வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டு

0
358

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 2,000ஆகவும் முச்சக்கர சக்கர வண்டிகளுக்கு ரூ. 3,000 ஆகவும் மற்றும் கார், வேன்கள், ஜீப்புகளுக்கு ரூ. 8,000க்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.