கருக்கலைப்பிற்கான உரிமை குறித்து ட்ரூடோவின் அறிவிப்பு

0
485

பெண்களின் கருக்கலைப்பு குறித்த உரிமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை விதிக்கப்படக் கூடிய வழக்குத் தீர்ப்பு தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பானதும், சட்ட ரீதியானதுமான முறையில் பெண்கள், கருவை கலைத்துக் கொள்வதற்கான உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் கருக்கலைப்பு குறித்த உரிமையை உறுதி செய்வதற்கு நாடாளுமன்றினை பயன்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழும் எதிர்கால அரசாங்கங்களின் கீழும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1988ம் ஆண்டில் கனடாவில் கருக்கலைப்பு குற்றச் செயல் கிடையாது என உச்ச நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்பிரகாரம் இன்று வரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கருக்கலைப்பு தொடர்பில் சட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.