61 மாடி கட்டிடத்தில் சரசரவென ஏறிய இளைஞர்!

0
222
A man scales Salesforce Tower on May 3, 2022. | Twitter user @k_j_floyd

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக Salesforce tower , 61மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏறிய இளைஞரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவை இயற்றி வருவதாக வெளியான தகவலை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் என்ற 22வயது கல்லுரி மாணவர், கருக்கலைப்புக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக சான் பிரான்ஸிஸ்கோ நகரின் உயரமான கட்டிடமாக கருதப்படும் Salesforce tower மீது ஸ்பைடர் மேன் போல் ஏறினார்.

இதன்போது போலிஸாரின் தொடர் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் 1,070அடி உயர கட்டிடத்தில் ஏறிய டெஸ்சாம்ப்ஸை மாடியில் வைத்து பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.