தடைகளை தகர்த்தெறிந்து சென்ற மாணவர் பேரணி!

0
110

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், அங்கு பொலிஸாரினால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளிலான வேலிகளை புரட்டி விட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

Gallery

நாடாளுமன்றத்துக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைந்துள்ளதால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Gallery

இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸார் அழைக்கப்பட்டதுடன் தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டது.