தந்தைக்கு வக்காலத்து வாங்கிய பெண்ணிற்கு பதிலடி!

0
567

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சாணக்கியனால் எச்சரிக்கப் பட்ட பொலிஸ் அதிகாரியின் மகள் தனது தந்தை தொடர்பில் குறிப்பிடுகையில்,

எனது தந்தை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் சேகரிக்கும் மாவட்ட அதிகாரி எனவும், தனது தந்தையாரை சாணக்கியன் தகாத வார்த்தைகளால் கதைத்தமை தவறு என அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து  பெண்ணின் கருத்துக்கு,

சகோதரி உங்களது தந்தையைக் குறிப்பிட்டுப் பேசிபோது உங்களுக்கு கோபம் வருகிறது. தந்தைக்காக வாதாடுகிறீர்கள் .அது உங்கள் தந்தை மகள் பாச உணர்வு. நீங்கள் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு புகைப்படம் சேகரித்துக் கொடுத்ததால் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களுக்ககும் மகன்கள், மகள்கள் உள்ளனர் .தந்தையைத் திட்டியதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபமும் வலியும் வருகின்றது என்றால் தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.