முள்ளிவாய்க்காலில் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

0
95

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று 03.05.2022 இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார்.

குறித்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் கிணற்றிற்கு சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தினை மீட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.