அரசியல்வாதிகள் வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடை!!

0
438

  இலங்கையில் தொலைக்காட்சி, வானொலியின் நிகழ்வுகளுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை  இலங்கை ஒலி,ஒளி பரப்பாளர் மன்றம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தொடர்புடைய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஒலி,ஒளி பரப்பாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் பொருளாதார மேம்படுத்தல் மற்றும் நிலையான அரசாங்கத்ததை அமைப்பதற்கு அரசியல்கட்சிகளுக்கான அழுத்தம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் இலங்கை ஒலி,ஒளி பரப்பாளர் மன்றம் கூறியுள்ளது.