டெஸ்ட் அணிகளில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து முதலிடம்

0
110

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரப்படுதலுக்கு அமைவாக டெஸ்ட் அணிகளில் அவுஸ்திரேலியாவும், ஒருநாள் அணிகளில் நியூசிலாந்தும் முதலிடத்தை பிடித்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அண்மைய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலுக்கமைய, அவுஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தியாவும், ஏழாவது இடத்தில் இலங்கையும் உள்ளன.

அவ்வாறே, ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை 8 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, இருபதுக்கு 20 அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் இலங்கை ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.