யாழ் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் உயிரிழப்பு!

0
315

மதுபானக் கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போத்தல் குத்தியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த குணசேகரன் குணசோதி (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லைக்கு வெளியே அமைந்துள்ள மதுபான சாலையில் நேற்று (02) மது அருந்திக்கொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவர் மது பாட்டிலை உடைத்து இளைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டினர். இக்குழுவினர் தப்பிச் சென்றதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பொட்டலுக்கு இலக்கான இளைஞரை மீட்டு பருத்தித்துறை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்கள் நால்வரையும் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.