இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக போக்குவரத்து வசதி!

0
505

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார் அதற்கமைய 20 -25 கி.மீ தூரம் பயணிப்பதற்கு போதுமான டீசல் கொண்ட பேரூந்துகளை அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.