பிள்ளையானின் சகாக்களால் ஏற்பட்ட சர்ச்சை

0
402

பிள்ளையானின் சகாக்களால் ஊடகவியலாளர்கள் முகநூலில் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது  இது குறித்து நபர் ஒருவர்  தனது முகநூலில் குறிப்பிடுகையில்,

 கடந்த சில தினங்களுக்கு முன்பதாக வாகரையில் நடந்த சம்பவம் தொடர்பாக சில முகநூல் பதிவுகளில் எனக்கு எதிராக பல பிரச்சாரம் இடம்பெற்று இருந்தது. உண்மையில் எனக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை ஆகவே சில முகநூல் நண்பர்கள் எனக்கு எதிராக எழுதி இருந்தார்கள்.

இதுதொடர்பாக பொறுப்புமிக்க கட்சி என்ற அடிப்படையில் கட்சி தலைவர் மற்றும் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன் அந்த வகையில் அவர்களும் எமக்கு தங்களுக்கும் குறித்த நபர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஒவ்வொரு நாளும் இவர்கள் தொடர்பாக முறைப்பாடு வருகின்றது .

ஆகவே இது கட்சி பிரச்சனை இல்லை தனிநபர் பிரச்சனை அவர்களுக்கு எதிராக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று பதில் அளித்து இருந்தார்கள் அதற்க்கான ஆதாரத்தை வைத்து கொண்டு இன்று எமது கொழும்பு தலமாக கொண்டு இயங்கும் ஊடக சங்கங்கள் ஒன்றினைந்து பொலிஸ்மா அதிபருக்கு இணையமூடாக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

எமக்கு எதிராக தங்களின் முகநூலில் எழுதுபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் நான் போலி முகநூல் பாவிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை எனது சொந்த முகநூலில் நான் இட்ட பதிவு ஒரு கட்சியின் தலைவருக்கு காரணம் உண்மையில் என்ன சம்பவம் நடந்தது என்பது அவர் ஊடக சந்திப்பின்போது தெளிவுபடுத்தி இருப்பார் எதற்க்காக எமது பெயரை பாவிக்கின்றார்கள் என்பதற்க்காகவே எனது சொந்த முகநூலில் பதிவு செய்து இருந்தேன்.

சியம் சிவா என்பவர் பட்டதாரிகளின் போரட்டத்தின்போது அறிமுகமாகியவர் என்ற வகையில் அவரை எனக்கு நன்கு தெரியும் அவர் முன்பு நடந்தவை மறந்து இருக்கலாம் நாம் அப்படி அல்ல மற்றவர் டயாசிங்கம் என்பவர் யார் என்றுகூட எனக்கு தெரியாது இவர் என்னையும் ஒரு போலிமுக நூலையும் சம்மந்தபடுத்தி எழுதியுள்ளார் அவருக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தெரியாது .

ஆகவே நான் யார் என்பதை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் அதன் தலைவரும் செயலாளரும் அறிவார்கள் எனவே அவர்களின் கருத்திற்கு அமைவாக எமது ஊடக அமைப்புகள் சட்டநடவடிக்கை எடுத்துள்ளது. நேற்றய தினம் எனது பதிவில் குறித்த 2 நபர்களது பெயர்களை நான் பாவித்து இருந்தால் அவர் களுக்கு என்னை விமர்சிக்க முடியும் சம்மந்தம் இல்லாமல் இவர்களின் நடவடிக்கை மிக மோசமானது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

தேவை ஏற்படின் எந்த ஊடகவிலாளரால் வாகரை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அதே போன்று நேற்றய தினம் அதே மக்களை சேர்த்து ஊடக சந்திப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டது என்பதும் எனக்கு தெரியும் பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போரவன் நான் இல்லை எம்மை விமர்சனம் செய்வதற்கு தகவல் தரும் ஊடகர் யார் என்பதும் எமக்கு தெரியும் இதை கூட எனது சொந்த முகநூலில்தான் பதிவிடுகின்றேன்.

கருத்தை கருத்தால் பதிவிட பழகி கொள்ளுங்கள் நான் போலி முகநூல் பாவிப்பதாக இருந்தால் பொலிசில் முறைப்பாடு செய்து அதை கண்டுபிடிங்கள் ஆகவே எனது சொந்த முகநூல் ஊடகவே எனது பதிவுகள் வரும் அது யாராக இருந்தாலும் என அவர் பதிவிட்டுள்ளார்.