ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி கோரி தொடர்ந்த போராட்டம்

0
128

இலங்கையில் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 24 நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இரவு பகலாக தொடரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதி கோட்டாகோகம என பெயரிடப்பட்டு சகல வசதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு (Ranjan Ramanayake) நீதி வேண்டி இன்றையதினம் இரவு கோட்டாகோகமவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் படத்தினை கைகளில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.