ரஷ்ய படகுகளை அளித்த உக்ரேனிய ஆளில்லா விமானம்!

0
94

கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்ததாக உக்ரைனின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று விடியற்காலையில் ஸ்மினி (பாம்பு) தீவு அருகில் வைத்து இரண்டு ரஷ்ய ராப்டார்-வகுப்பு படகுகள் அழிக்கப்பட்டதாக தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளின்படி, கருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ரஸ்ய கப்பல்கள் வானிலிருந்து ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைக் காட்டுகின்றன.