மக்களுக்கு இடமளிக்க வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி!

0
101

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் இதுபோன்று எவ்விதமான சூழ்நிலையும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தனது ஆட்சியின் பின்னர் மிகவும் நல்லதொரு நாட்டை ராஜபக்ஷர்கள் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதே தமது நம்பிக்கை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.