ராஜபக்ச குடும்பத்தின் மோசடியை வெளிப்படுத்திய ஊடகம்!

0
88

ஆஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்திரேலியாவில் ராஜபக்சே குடும்பம் நடத்திய சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து சர்வதேச ஊடகமான ஏபிசி செய்திகள் வெளியிட்டுள்ளது.

அதன்படி நேற்றையதினம் ஏபிசி வெளியிட்ட செய்தியில், கான்பெராவை தளமாகக் கொண்ட ஆஸ்பென் மெடிக்கல் & ராஜபக்சே குடும்பத்தின் சந்தேகத்திற்குரிய பணமோசடியை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்ததற்காக இழிவான நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், அவர் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவிற்காக பணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி  கூறியுள்ளது.