நயன் கையை பிடித்து இழுத்த ரசிகர்! கடுப்பான விக்கி

0
196

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே ரசிகர்களுடன் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து, திரையரங்கில் நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற ஹிட் படங்களை தொடர்ந்து, விக்னேஷ் சிவனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் என்பதே உண்மை.

விஜய் சேதுபதி ஹீரோவாக, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது. 

காதலருடன் வந்த நயன்தாரா

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த நயன்தாரா, தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அதை பார்க்க நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், தேவி தியேட்டருக்கு வந்துள்ளார்.    

நயன்தாராவை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பலரும் தலைவி, லேடி சூப்பர் ஸ்டார் என கத்தி கூச்சல் போட்டனர். நயன்தாராவும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். 

கையை பிடித்த ரசிகர் :

நயன்தாராவின் கையை ரசிகர் ஒருவர் பிடித்ததால் விக்னேஷ் சிவன் கோபமடைந்து, விரைவில் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் கூறுகின்றனர். மேலும், விக்னேஷ் சிவன் அடுத்தாக அஜித்தை வைத்து படத்தை நினைத்தால் பதறுகிறது என அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.