எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் போராட்டம்

0
107

எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டுத்தாபனத் தலைவருடன் நடந்த கலந்துரையாடலின் போது, தங்கள் கட்டணத்தில் 40% திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.