சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகார மட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளது

0
136

இந்த வாரத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ள நிலையில், சில கலந்துரையாடல்கள் இணையம் ஊடாகவும் இடம்பெறவுள்ளது.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இரண்டு மாதங்களுக்குள் வெற்றியளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.