பிலிப்பைன்ஸ் குடியிருப்புகளில் தீ விபத்து

0
105

பிலிப்பைன்ஸ் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் மணிலாவிற்கு அருகில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 05:00 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ விபத்தில் , 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த விபத்து கியூசான் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் ஒரு நெரிசலான குடியிருப்பு தொகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகியதாக தீயணைப்பு அதிகாரி கிரெக் பிச்சாய்டா தெரிவித்துள்ளார். தீ வேகமாக பரவியதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. உலகின் மிக அதிக சனத் தொகை கொண்ட நாடுகளில் பிலிப்பைன்ஸ் ஒன்றாகும்,

அதன் தலைநகர் மணிலாவில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.

மெட்ரோ நகரமான மணிலா, தலைநகரை உள்ளடக்கிய பகுதி மற்றும் கியூசான் உட்பட மற்ற நகரங்களில் சுமார் 1 கோடியே 3 இலட்சம் மக்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.