இன்றைய ராசிபலன் {02 மே 2022}

0
570

மேஷம்

அன்பர்களுக்கு இனிய நாளாக இருக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு வேலைவாய்ப்புகள் புதிதாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும் விசா தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்குவரும் நல்ல நாள் ஆகும்.

ரிஷபம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டாகும்.

 மிதுனம்

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கடகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம் குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதம் ஆகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 கன்னி 

நேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம் . வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியை முடித்து நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
கணவன் மனைவி உறவு சற்று வாக்குவாதங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும் மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவார்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகும் உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

விருச்சிகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்கலாம். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள்.

தனுசு 

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் தங்கள் கல்வியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் துவங்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை மனதில் மேலோங்கி நிற்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு வழக்குகளில் வெற்றி அடைவீர்கள்.

மகரம் 

நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும் பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள்.

ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும் கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்

நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

குழந்தைகளுக்கான கல்வி செலவுகள்சற்று கூடுதல் ஆனாலும் மனநிம்மதி ஏற்படும் ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள் தனவரவு இருக்கும்.

மீனம் 

நேயர்களுக்கு இன்றைய நாள் நாள் ஆகும் திருமணம் போன்ற சுப காரிய வாய்ப்புகள் கைகூடி வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

புதிதாக தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல முன்னேற்றங்களை காண்பார்கள்.