அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

0
623

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது.

வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீரிச் சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.