பாலஸ்தீனில் யூதக் குடியிருப்புக் காவலரை சுட்டுக் கொலை

0
110

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூத குடியேற்றக் காவலரை அறியாத மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது, பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரையில் உள்ள வான்வழி குடியிருப்பு நுழைவாயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு காவலாளியைக் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கல்கிலியா நகருக்கு அருகில் உள்ள அசுன் கிராமத்தில் 27 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 2 மாதங்களில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலில் 27 பாலஸ்தீனியர்களும் 15 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.