இடைக்கால அரசு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட தகவல்!

0
129

நாட்டில் கடந்த காலங்களில் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டில் சமந்தப்பட்ட நபர்களுடன் எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அச்சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வகட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்போது அரசாங்கம், பொதுமக்கள் மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்தவகையில் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், தூய்மையான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.