விவசாயிகளுக்கான விநோத போராட்டம்!

0
130

தமிழ்தேசிய கூட்டமைப்பின் “தமிழ்தேசிய மேநாள்” நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றிருக்கின்றது.

இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மே தின பேரணியானது ஏ9 வீதி ஊடாக டிப்போ சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த பேரணி ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், (M.A.Sumanthiran) எஸ் சிறிதரன், ( S Sridharan) செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, (Mavai Senathirajah) சரவணபவன் ஊள்ளிட்டோர் தொடங்கினர்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மே தின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய குறித்த பேரணியில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.