லொட்டரி விழுந்ததை மனைவியிடம் சொல்லாமல் மறைத்த கனேடியர்

0
160

கனேடியர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாகக் கிடைத்த நிலையில், தனக்கு பரிசு விழுந்த விடயத்தைத் தன் மனைவியிடம் சொல்லாமல் இரகசியமாகவே சில நாட்கள் வைத்திருந்திருக்கிறார் அவர்.

மெட்ரோ வான்கூவரைச் சேர்ந்த Abbas Ebadypoor, லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

பிறகு அந்த லொட்டரிச் சீட்டுக்கு பரிசு ஏதாவது விழுந்துள்ளதா என அவர் சோதிக்க, 75 டொலர்கள் பரிசு விழுந்துள்ளதை கவனித்துள்ளார் அவர்.

அதற்குப் பிறகுதான், கவனமாக பார்க்கும்போது, அது 75 டொலர்கள் அல்ல, 75,000 டொலர்கள் என்பது Abbasக்கு புரிந்திருக்கிறது.

ஆனாலும், சில நாட்களுக்கு அந்த விடயத்தைத் தனது மனைவியிடம் சொல்லாமலே வைத்திருந்ததாக தெரிவிக்கிறார் Abbas. காரணம், தனக்கு உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வதற்காகவே, சில நாட்கள் அதைத் தன் மனைவியிடம் சொல்லாமல் மறைத்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.

ஓய்வு பெற்ற பேருந்து சாரதியான Abbas, இந்த பரிசு கிடைத்ததால், தாங்கள் இருவரும், தங்கள் ஓய்வு காலம் குறித்த கவலையில்லாமல் வாழலாம் என்ற நிம்மதி தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.